ஹைதியில் நிலநடுக்கம்: 10 பேர் பலி




ஹைதியின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தில் குறைந்தது பத்து பேர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கமானது 5.9 அளவில் இருந்தது. 2010 ஆம் ஆண்டு அந்த கரீபியன் நாட்டை நிலநடுக்கம் தாக்கியதில் 2 லட்சம் பேர் மரணித்தனர்.
பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் உருகுலைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அதிபர் ஜோவ்நெல் மொயீஸ் நாட்டு மக்களை அமைதிகாக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அரசின் செய்தித் தொடர்பாளர், இந்த நிலையை எதிர்க்கொள்ள பேரிடர் மீட்புப் படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.