“ஒருநாட்டில் ஒரு வளம் இருந்தால் ஒரு வளம் இருக்காது,ஆனால் அனைத்து வளங்களையும் கொண்ட பகுதியாக இலங்கையுள்ளது.இங்கு அனைத்தும் உள்ள நிலையில் ஒற்றுமையென்பது மட்டும் கொஞ்சம் குறைவாகவுள்ளது. அதனைமட்டும் சரிசெய்யும்போது உலகில் யாரும் வெல்லமுடியாத பகுதியாக இலங்கை மாறும்" மட்டக்களப்பில் நகைச் சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சிறப்புரைகள் 125 வருடஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது,தெரிவித்தார்.
“என்தாயை பாதுகாப்பதுபோன்று இலங்கை தமிழர்கள் என் தமிழை பாதுகாக்கின்றீர்கள்.உலகமெங்கும் இன்று தமிழ் பரவியதுக்கு காரணம் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துசென்ற தமிழர்களே காரணம்.சுத்தமான தமிழ் உலகமெங்கும் வாழ்வதற்கு காரணம் மட்டக்களப்பு மண்ணில் இருந்துசென்றவர்களே”நடிகர் @Actor_Vivek


Post a Comment
Post a Comment