இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்ய அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குடிமக்களைக் கண்காணித்தல் மற்றும் புலனாய்வு சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் இஸ்லாமிய தீவிரவாதத்தை பரவதை நிறுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

ரொயிட்டர்ஸ் சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

டிசம்பர் மாதமளவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நூறு சதவீதம் தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் கலிபோனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவு, அது அடிப்படையற்றது என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு சிறிய தடையெ என்றும், அது அமெரிக்க அதிகாரிகள் குடியுரிமையை நீக்குவதே என்றும், அது வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தான் வெற்றிபெற்றால் இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்து பாதுகாப்பு கட்டமைப்பை மீளக்கட்டியமைப்பதே தனது முதன்மை நோக்கமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றும் இன நல்லிணக்கம், மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பற்றியே பேசியதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.