கோடம்பாக்கத்தில் அநேகம் பேருக்கு பழக்கமானவர் நடிகை ரோஜா.
அவரது அரசியல் வாழ்வு மின்னாமல் சுணங்கும்போதெல்லாம் கவலைப்பட்ட கோலிவுட், இப்போது அவரைப் போலவே பிரைட் ஆகிவிட்டது. சென்னையிலிருந்து போன் மேல் போன் அடித்து அவருக்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். ஏன்? ஆந்திராவில் மினிஸ்டர் ஆகப் போகிறாரே... அதற்குதான். சந்திரபாபு நாயுடு கட்சியிலிருந்து ரோஜா விலகி ஜெகன்மோகன் கட்சியில் இணைந்தார். அப்போது நாயுடு ஜெயித்தார். தப்பு பண்ணிட்டீயேம்மா... என்று கவலைப்பட்டார்கள் இங்கே. இப்போது லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக பதவி கிடைக்கப் போகிறது அவருக்கு.


Post a Comment
Post a Comment