அக்கரைப்பற்று முஸ்தபா சாரதி விபத்தில் உயிரிழப்பு

கடந்த 4/5/2019 ல் மோட்டார் பைசிக்கிளில், பயணித்த சாரதி கட்டுபாட்டையிழந்து, தாமாகவே, விபத்தில் சிக்கி கடுங்காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், இன்று காலை மரணமடைந்துள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிசார் இன்று நீதிமன்றில் தெரிவித்தள்ளனர்.

இவ்வாறு மரணமடைந்த நபர், அக்கரைப்பற்று-04 முதலியார் வீதியைச் சேர்ந்த முஸ்தபா(வயது 59)என்பவராகும்.

மரண விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.