அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் ஊடக அறிக்கை




பாறுக் ஷிஹான்

அண்மையில் நமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினைத் தொடர்ந்து எமது முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்கள்  அமைச்சர்கள்  மற்றும் ஆளுநர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டு முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கு
உறுதுணையாக திகழ்ந்தமையை அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா வெகுவாக பாராட்டுவதாக அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்
நாஸிர்கனி (ஹாமி) தெரிவித்துள்ளார்.

உண்மையில் முஸ்லிம் சமூகத்துக்கு இக்கட்டான நிலை ஏற்பட்ட போது ஒற்றுமையாகச் செயற்பட்டு தமது பதவிகளைத் துறந்து
நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் நற்செய்தியை பறைசாற்றிய அரசியல்வாதிகளை பாராட்டாமல் இருக்கமுடியாது.

அரசியல்வாதிகளிடம் நிலவும் இவ்வொற்றுமை தொடர்ந்தும் நீடிக்க பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள செயலாளர்
  முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக கருத்தொருமித்துச் செயற்படவேண்டுமெனவும்  எதிர்காலத்தில் நடைபெறவுள்ள
தேர்தல்களின் போது இதே ஒற்றுமையைக் வெளிப்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் சுபீட்சத்துக்கும்
பாடுபட வேண்டு எனவும் கேட்டுக்கொண்டர்.