இந்தியா மீதான பாகிஸ்தானின் வர்த்தகத் தடை - யாருக்கு அதிக பாதிப்பு?


ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை இந்திய அரசு நீக்கும் வரை பாகிஸ்தானுடனான வர்த்தகம் இயல்பாகவே நடந்து கொண்டிருந்தது. வாகா மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீர் ஆகிய இரண்டு இடங்களை மையமாக கொண்டு இதுவரை வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 70 ஆண்டு காலமாக அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை தொடர்ந்து, இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தி கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்ததன் மூலம், எந்த நாட்டிற்கு அதிகளவு பாதிப்பு ஏற்படும் என்பதே தற்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி.

வர்த்தகம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

உலகிலுள்ள 220 நாடுகள் மற்ற நாடுகளுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தை கணக்கிட்டு வரும் சர்வதேச வர்த்தக மையத்தின் (ஐடிசி) தரவின்படி, 2018ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு 383 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பாகிஸ்தானின் மொத்த ஏற்றுமதியில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே.
அதே காலக்கட்டத்தில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு 9.9 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் / சேவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும், அது பாகிஸ்தானின் மொத்த இறக்குமதியில் வெறும் மூன்று சதவீதம் என்றும் அந்த தரவிலிருந்து தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் வர்த்தக தடையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இருநாட்டு தொழிற்துறையிலும் அதன் தாக்கம் இருக்குமென்று பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பருத்தி

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் அதிகளவு இறக்குமதி செய்யப்படுவது பருத்திதான். சர்வதேச வர்த்தக மையத்தின் தரவின்படி, கடந்த ஆண்டில் சுமார் 466 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பருத்தியை இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது.
குறிப்பாக, 2014 - 2018 காலகட்டத்தில் இது ஒவ்வொரு ஆண்டுக்கு தலா நான்கு சதவீதம் அதிகரித்து, பாகிஸ்தானின் மொத்த பருத்தி இறக்குமதியில் 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே நிலவும் பதற்றமான சூழலால் பாகிஸ்தானின் ஆடை உற்பத்தி துறையே அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார் பாகிஸ்தான் - இந்தியா தொழிற்கூட்டமையின் தலைவரான நூர் முஹம்மத் கசூரி.
"ஆடை உற்பத்தித்துறைக்கு அத்தியாவசியமான பருத்தி உள்ளிட்ட மூலப்பொருட்கள் இந்தியாவிலிருந்து மிகவும் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. எனவே, பாகிஸ்தானின் ஏற்றுமதியில் முக்கிய இடத்தை கொண்டுள்ள ஆடை உற்பத்தித்துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
பாகிஸ்தானின் வர்த்தக தடையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கனிமங்கள்

சுண்ணாம்பு, சிமெண்ட், உப்பு, சல்பர் மற்றும் பல்வேறு வகையான கனிமங்களே பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களாகும். இவை மட்டும் இந்தியாவுக்கான பாகிஸ்தானின் கடந்த ஆண்டு ஏற்றுமதியில் 96 மில்லியன் டாலர்கள் மதிப்பை கொண்டிருந்தது என்று ஐடிசி கூறுகிறது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் அரசு அதிகாரிகள், "எங்களது மாநிலத்தில் அதிகளவில் கிடைக்கப் பெறும் கனிமங்களின் தேவை இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சிமெண்ட் உற்பத்தித் துறை இதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது" என்று கூறினர்.
2014 - 2018ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் கனிமங்களின் அளவு 17 சதவீதம் அதிகரித்தது.
"இருநாடுகளுக்கிடையே நிலவி வரும் பதற்றமான சூழலால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள இந்த துறையை, சீனாவின் மேலதிக முதலீடுகளின் மூலம் ஈடுகட்ட முடியுமென்று பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்,.

கரிம வேதிப்பொருட்கள்

பாகிஸ்தானின் வர்த்தக தடையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பருத்திக்கு அடுத்து பார்த்தோமானால், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சுமார் 402 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கரிம வேதிப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஐடிசியின் தரவு சுட்டிக்காட்டுகிறது.
அதேபோன்று, பாகிஸ்தானில் பரவலாக கிடைக்கப் பெறாத சில வகை வேதிப்பொருட்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக நூர் மொஹமத் கூறுகிறார்.
2018ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்த பொருட்களில் 21 சதவீதம் வேதிப்பொருட்களாகும். இது ஆண்டுதோறும் 21 சதவீதம் அதிகரித்து வருகிறது.

மற்றவை என்னென்ன?

பாகிஸ்தானின் வர்த்தக தடையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பருத்தி, கனிமங்கள், வேதிப்பொருட்களை தவிர்த்து பார்த்தோமானால் பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள் போன்றவற்றை பாகிஸ்தானிலிருந்து இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்கிறது. இவற்றின் மதிப்பு 93 மில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதே போன்று, சில வகை பழங்கள் மற்றும் காய்கறிகளை பாகிஸ்தானுக்கு இந்தியாவும் ஏற்றுமதி செய்கிறது. இவற்றின் மதிப்பு 21 மில்லியன் டாலர்கள்.
இவற்றை தவிர்த்து, சுமார் 23 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சர்க்கரை மற்றும் இனிப்பு பொருட்களை பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது.
ரப்பர், மருத்துவ உபகரணங்கள், தேயிலை, காபி, எண்ணெய் வகைகள், உலோகங்கள், சோப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் மிகவும் குறைந்த அளவில் இரண்டு நாடுகளுக்கிடையே வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.

மீண்டும் தொடங்குமா?

பாகிஸ்தானின் வர்த்தக தடையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான வர்த்தகம் எவ்வித பிரச்சனையும் இன்றி மேற்கொள்ளப்படும்பட்சத்தில், அதன் மதிப்பு விரைவில் 10 முதல் 20 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கக் கூடும் என்று நூர் மொஹமத் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
எரிசக்தி, மருத்துவம், கல்வி மற்றும் கட்டமைப்பு ஆகிய துறைகளில் இந்தியா பாகிஸ்தானுக்கு உதவலாம் என்று அவர் கூறுகிறார்.
அதே வேளையில், வர்த்தக பாதையை அமைப்பதற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இந்தியா தனது வர்த்தகத்தை மத்திய ஆசிய நாடுகளில் எளிதாக மேற்கொள்ள வழிவகை ஏற்படும் என்று அவர் நம்புகிறார்.