கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடு - போலியான செய்தி தொடர்பில் அறிவிப்பு



சமூக ஊடகங்களில் பரப்பப்படும்‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில் வெளியான தொலைபேசி இலக்கங்கள் போலியானதென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.


குறித்த தலைப்பில் ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் நேரடி இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.


இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.