கையளிப்பு

கிண்ணியாத் தள வைத்தியசாலைக்கான Benz அம்புலான்ஸ் வாகனம் இன்று (09) கௌரவ சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற கையளிப்பு வைபவத்தில் கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. மசூத்திடம் அம்புலான்ஸ் வாகனத்திற்கான ஆவணங்களும் திறப்பும் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் முன்னாள் சுகாதார இராஜங்க அமைச்சர் கௌரவ பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா, மேலதிகச் செயலாளர் சந்திர குப்தா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


--- Advertisment ---