நாட்டில் மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
நேற்று (19) நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காயின் சில்லறை விலை ரூபாய் 800ஐ நெருக்கியிருந்தது. அதேவேளை பல பகுதிகளில் மொத்த விலை ரூபாய் 500 ஆக இருந்தது.
மத்திய வங்கியின் தினசரி விலை அறிக்கையின்படி, புடலங்காயின் விலையும் ரூபாய் 600இற்கு மேல் பதிவாகியுள்ளது.
அதன்படி, பச்சை மிளகாய் கிலோவுக்கு ரூபாய் 1000இற்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தக்காளி விலை ரூபாய் 500முதல் ரூபாய் 600 வரை பதிவாகியுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.


Post a Comment
Post a Comment