கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு தேசிய விருது; சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்


பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்த கன்னடப் படமான கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த சண்டை திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாநதி (தெலுங்கு) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான உரி திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் என்பவருக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த சண்டை திரைப்படம் - கே.ஜி.எஃப்படத்தின் காப்புரிமைFACEBOOK
Image captionசிறந்த சண்டை திரைப்படம் - கே.ஜி.எஃப்
66வது தேசிய விருதுகள் இன்று புதுடெல்லியில் அறிவிக்கப்பட்டது.

தேசிய விருது பெற்ற சிறந்த திரைப்படங்கள்

சிறந்த தமிழ் படம் - பாரம்
சிறந்த இந்தி படம் - அந்தாதுன்
சிறந்த மலையாளம் படம் - சுடானி ஃப்ரம் நைஜீரியா
சிறந்த அசாமிய படம் - புல்புல் கேன் சிங்
சிறந்த தெலுங்கு படம் - மகாநதி

சிறந்த நடிகர்கள்

1. ஆயுஷ்மான் குரானா - அந்தாதுன் (இந்தி)
2. விக்கி கௌஷல் - உரி (இந்தி)
தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்த ஃபேஸ்புக் - காரணம் என்ன தெரியுமா?
  • சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) - அர்ஜித் சிங் - பத்மாவத் (இந்தி)
  • சிறந்த பின்னணி பாடகர் (பெண்) - பிந்து மாலினி - நதிசரமி (கன்னடா)
  • சிறந்த துணை நடிகை - சுரேகா சிக்ரி - பதாய் ஹோ (இந்தி)
  • சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - பதாய் ஹோ (இந்தி)
பதாய் ஹோபடத்தின் காப்புரிமைFACEBOOK / AYUSHMAN KHURANNA
  • சமூக பிரச்சனையை பேசும் சிறந்த திரைப்படம் - பேட்மேன் (இந்தி)
  • சிறந்த ஆடை அலங்காரம் - மகாநதி (தெலுங்கு)
  • சிறந்த இசை - சஞ்சை லீலா பன்சாலி, பத்மாவத் திரைப்படத்திற்காக (இந்தி)
  • சிறந்த நடனம் - கூமர் பாடல், பத்மாவத் திரைப்படம் (இந்தி)
தீபிகாபடத்தின் காப்புரிமைFACEBOOK / DEEPIKA PADUKONE
  • சிறந்த ஒளிப்பதிவாளர் - எம் ஜி ராதாகிருஷ்ணன், ஒலு (மலையாளம்) திரைப்படத்திற்காக
  • சிறந்த பின்னணி இசை - உரி (இந்தி)
படப்பிடிற்கான சிறந்த மாநிலம் - உத்தராகண்ட்