அன்பளிப்பு

 


வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான பதில் தூதுவர் ஹுமைட் அல் தமீமி அவர்களினால், பெரோஸா முஸம்மில் அம்மையாரின் தலைமையில் இயங்கும் 'காந்தா சவிய' மகளிர் அமைப்பிற்குத் தையல் இயந்திரங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.


ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மகளிரை ஊக்குவிக்கும் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் பத்து இலட்சம் பெறுமதியான குறித்த தையல் இயந்திரங்கள், குருநாகல் மாவட்டத்தில் வசிக்கும் 'காந்தா சவிய' மகளிர் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள 23 வரிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான பதில் தூதுவர் ஹுமைட் அல் தமீமி, 'காந்தா சவிய' மகளிர் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துசிறப்பித்தனர்.  Advertisement