ஊடகவியலாளரைப் பழிவாங்கிய குற்றச்சாட்டு


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


மருதமுனை தாய்,சேய் நலனோம்பு நிலைய குறைபாடுகள் தொடர்பில் மேலதிகாரிக்கு அறிவித்தமைக்காக ஊடகவியலாளரைப் பழிவாங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் நியாயம் ஒன்றினை பெற்றுத்தருமாறு கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்துள்ள சம்பவம் ஒன்று இன்று(20)  பதிவாகியுள்ளது.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் மருதமுனை தாய்,சேய் நலனோம்பு நிலைய குறைபாடுகள் தொடர்பில் மேலதிகாரிக்கு அறிவித்தமைக்காக ஊடகவியலாளரைப் பழிவாங்கிய குற்றச்சாட்டை உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்முனைபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

இது பற்றித் தெரியவருவதாவது,
மருதமுனையில் இயங்கி வரும் தாய், சேய் நலனோம்பு நிலையத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக(16.11.2020) சென்ற தாய்மார்களை கைக்குழந்தைகளுடன் காலை 11.30 வரை காத்திருக்க வைத்த சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் தனது நான்கு மாத குழந்தையினை அழைத்துச் சென்ற ஊடகவியலாளர் ஜெஸ்மி மூஸா கல்முனை பிராந்திய தாய், சேய் வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.பஸாலுக்கு அறிவித்துள்ளார்.

நிலையப் பொறுப்பாளரான கல்முனை தெற்கு வைத்திய அதிகாரி றிஸ்னி முத்தின் கவனக் குறைவினை கண்டித்த பிராந்திய வைத்திய அதிகாரியின் பணிப்புரைக்கமைய கல்முனையிலிருந்து ஊசி மருந்துகள் வரவழைக்கப்பட்டு குறித்த விடயம் நடந்தேறியுள்ளது

சம்பவம் நடைபெற்ற மறுதினம் மருதமுனை தாய்இசேய் நலனோம்பு நிலையத்திற்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கலாக 12 பேரை அழைத்து வந்து குறித்த ஊடகவியலாளரைப் பழிவாங்கும் நோக்கில் சுகாதார வேட்டை நடத்தியுள்ளார்

அதிகாரியின் கடமைக்கு தொந்தரவற்ற முறையில் நடந்து கொண்ட ஊடகவியலாளர் இது தொடர்பில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு முறைபபாடொன்றை வழங்கியதன் நிமித்தமே விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது

பழி வாங்கும் நோக்கில் நிகழ்வு நடந்த மறு நாள் மருதமுனையிலுள்ள தமது வீட்டிற்கு தரிசித்தமை, தொடராகப் பாவிக்கின்ற ஆறு மீன்கள் விடப்பட்டுள்ள கிணற்றுக்குள் இறந்த குடம்பி இருப்பதாகக் கூறி பொலிஸாரை தவறாக வழி நடத்த எத்தனித்தமை, வேறு பிரதேசங்களில் இருந்த சுகாதாரப் பரிசோதகர்களை பழிவாங்கும் நோக்கில் அழைத்து வந்தமை, அறிவுறுத்தல் ஏட்டைப் பிழையாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு எதிராக முறைப்பாடு செய்யபபட்டுள்ளது

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம், சுகாதார அமைச்சு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலம், மாகாண சுகாதர சேவைகள் பணிப்பாளர், கல்முனை பொலிஸ் நிலையம், கல்முனைப் பிராந்திய தாய் சேய் வைத்திய அதிகாரி, பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி என   ஊடகவியலாளர்   முறைப்பாடு மேற்கொள்ள செய்தள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் சுதந்திர ஊடகவியலாளர் என்ற வகையில் மக்களின் முறைப்பாட்டில் செயற்பட்டது தவறானதா? என கேட்டதுடன் இச் சம்பவம் நடந்த மறுநாள்( செவ்வாய 18.11.2020) எனது வீட்டுக்கு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி 'றிஸ்னி முத்' தலைமையிலான குழுவினர் வந்தனர். அதில் சிரேஷ்ட சுகாதாரப் பரிசோதகர்களான பாறூக், இத்ரீஸ், நிஜாம் ஆகியோருடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட கள உத்தியோகத்தர் பலரும் இதில் உள்ளடங்கி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

--

Thanks & Best Regards,

FAROOK SIHAN(SSHASSAN)-Journalist-මාධ්‍යවේදී
B. F .A (Hons)Diploma-in-journalism(University ofJaffna)
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
0779008012-(URGENT)
sihanfarook@yahoo.com, sihanfarook@gmail.com,sihanfarook@hotmail.com
0719219055,0712320725,0754548445