தனிமைப்படுத்தப்பபட்ட இடங்களில் விசேட பொறிமுறை


சட்டநடவடிக்கை காலதாமதமாவதற்கு நீதிமன்ற செயற்பாடு காரணமாகும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இன்று(30) மதியம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார் மேலும் கருத்து தெரிவிக்கையில் கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறியவர்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர்களை சட்டத்தின் முன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.எனினும் நீதிமன்ற செயற்பாடு காரணமாக காலதாமதமாகின்றது.நீதிமன்ற செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுக்கும் பட்சத்தில் எத்தனை பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு தெரிய வரும். மேலும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இதுவரை 58 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆலையடி வேம்பு அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று மக்கள் வழமை போன்று நடமாட முடியாத வண்ணம் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான பொறுமுறை நாளை அம்பாறையில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது என்றார்.