21 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 உயர் நீதிமன்றத்திற்கான மேலும் ஆறு நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, அவர்களுக்கான நியமனங்கள் இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

- Advertisement -

அத்துடன். மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கான 15 நீதிபதிளும் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக அர்ஜுண ஒபேசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டது

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பணிபுரியும் சில நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த வெற்றிடங்களுக்கு, புதிய நீதிபதிகளின் பெயர்கள் ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டு,நாடாளுமன்ற பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதியின் பரிந்துரைக்கு, நாடாளுமன்றப் பேரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Advertisement