முறைகேடாக அகற்றப்படும் மனித கழிவுகள்-நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நீர் நிலைகளில் மனிதக்கழிவுகளை கொட்டுவதற்கு கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் க.சிவலிங்கம் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்று(24)  மாநகரசபையின் வைத்திய சுகாதார அதிகாரி அர்சாத் காரியப்பரை  அழைத்து ஆதாரத்துடன் தெரியப்படுத்தினர். பொதுமக்களும் விவசாயிகளும் மீனவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்து கல்முனை மாநகர சபையின் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

மனித கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பதால் பொதுமக்கள் சுகாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள் அந்த கழிவுகளை மீன்கள் உண்பதனால் மீன் சாப்பிட முடியாத நிலையும் ஏற்படும். கல்முனை மாநகர மேயர் இந்த நடவடிக்கையை உடன் நிறுத்தி மாற்று வழியை செய்ய வேண்டும் என மாநகர சபை உறுப்பினர்களான  சிவலிங்கம் மற்றும் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இச்செயலினால் கல்முனை நகரில் கொட்டப்படும் இந்த இடத்துக்கு அருகில் உள்ள கல்முனை மாநகர சபை, பொது நூலகம், பஸ்தரிப்பு நிலையம்,பொலிஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை என்பன உள்ளதுடன் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.