ஆலையடிவேம்பில் தடுப்பூசி ஏற்றும் இராணுவத்தின் நடமாடும் சேவை


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் தங்கியிருக்கும் முதியவர்களுக்கு நடமாடும் சேவை மூலம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தின் 241 ஆம் படைப்பிரிவின் கீழ் வரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் தடுப்பூசி ஏற்றும் நடமாடும் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் வரும் வாச்சிக்குடா,  ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று -7/4 மற்றும் 7,  7/1 உள்ளிட்;ட பிரிவுகளிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட வைத்திய குழுவினர் அம்புலன்ஸ் வசதிகளுடன் வீடுகளுக்கு சென்று தடுப்பூசியினை ஏற்றி வருகின்றனர்.
அத்தோடு பொதுமக்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
இப்பணிக்கு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.