கேரளா கஞ்சாவுடன் கைதான இளைஞனிடம் விசாரணை  பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த இளைஞனை சாய்ந்தமருது  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் 135 கிராமுடன் குறித்த  இளைஞனை  இன்று(03) மதியம் கல்முனை விசேட பிரிவின் தகவலுக்கமைய  சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.


நீண்ட காலமாக குறித்த இளைஞன் கேரளா கஞ்சாவினை விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை விசேட பிரிவினர் வழங்கிய தகவலை அடுத்து துரிதமாக செயற்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர்  எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான குழுவினர்   சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 30 வயதுடடைய இளைஞனை  கைது செய்ததுடன் அவர் வசம் இருந்த 135 கிராம் கேரளா கஞ்சாவினையும் மீட்டுள்ளனர்.
 
மேலும் இவ்வாறு கைதாகிய சந்தேக நபர் உட்பட அவர்  வசம் மீட்கப்பட்ட  சான்று பொருட்கள் சகிதம்  சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  சாய்ந்தமருது  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.