கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்களின் சேவையை பாராட்டி, கெளரவம்


 

நூருள் ஹுதா உமர். 

சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் புதிய அலுவலக கட்டித்தொகுதிக்கான அடிக்கல் நடுவிழா இன்று (11) காலை சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம். அன்வர் ஸியாத் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது விரைவில் ஓய்வு பெறவுள்ள கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்களின் சேவையை பாராட்டி சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தினரால் நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.