ஜீவன் தியாகராஜா, வட மாகாண ஆளுநராக பதவி பிரமாணம்


 


தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா, வட மாகாண ஆளுநராக இன்று (11) பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவி பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.