இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி விளிம்பில் காணப்படுகிறது.
போட்டியின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில், 277 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 5விக்கட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை பெற்றிருந்தது.
அவ்வணி சார்பாக ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
முன்னதாக, நியூசிலாந்து அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸிற்காக 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து நியூசிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அதற்கமைய, இங்கிலாந்து அணி தற்போது 277 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது


Post a Comment
Post a Comment