கிழக்கில் இன்றும் நாளையும் பாடசாலைகளில் மகிழ்ச்சிகரமான கற்பித்தல்



 


கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் இன்று 06 ஆம் திகதி திங்கட்கிழமை 2022 முதலாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படுவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ள நாயகம் தெரிவித்தார் .


அவர் இது தொடர்பான அறிவுறுத்தல்களை 17வலயங்களின் வலய கல்வி பணிப்பாளர் களுக்கு அறிவித்துள்ளார்.

 இன்றும் ,நாளையும் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால் மகிழ்ச்சிகரமான சூழலை ஏற்படுத்துமாறு கேட்டிருக்கிறார் .
அங்கு மாணவர் கழகம் ,கலாச்சாரக் கழகம் ,மேடை நாடகம், விவாத போட்டிகள் போன்ற பலவிதமான புறக்கிருத்திய செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தி,  மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

இதேவேளை ,பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை  (6) முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
கடந்த மாதம் 19 ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.