(க.கிஷாந்தன்)
பத்தனை பகுதியில் இலவச மருத்துவ முகாம் இன்று (30.07.2022) காலை இடம்பெற்றது. இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்மான குறித்த மருத்துவ முகாம் பத்தனை ஜெயசிரிபுரவில் இடம்பெற்றது.
பத்தனை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவையில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சைகளையும், மருத்துவ ஆலோசனையையும் பெற்றனர்.
இதன்போது, பத்தனை கிராம சேவகர் பிரிவு சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயனடைந்தனர்.
குறித்த நடமாடும் சேவைக்கான அனுசரணையை கொட்டகலை சுகாதார பிரிவினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment