உலர் உணவு பொதிகள் கையளிக்கும் நிகழ்வு




 (க.கிஷாந்தன்)

 

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வறுமையை எதிர்கொண்டு வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் கையளிக்கும் நிகழ்வு கந்தப்பளையில் இடம்பெற்றது.

 

கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு கந்தப்பளை பொலிஸ் நிலைய வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 

இந் நிகழ்வில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் பேரில் பிரஜா பொலிஸ் பிரிவு மற்றும் கந்தப்பளை நகரின் வர்த்தக சங்கத்தினர் அனுசரணையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட  20 வரிய குடும்பங்களுக்கான  அத்தியவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டிருந்தது.

 

இந் நிகழ்வில்  அதிதிகளாக நுவரெலியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுகமசூரிய மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பஷநாயக்கா ஆகியோர் கலந்து கொண்டு, பொதிகளை வழங்கி வைத்தனர்.