போட்டோகொப்பி இயந்திரம் அன்பளிப்பு



 


நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்


கொரிய சர்வதேச கூட்டுறவு முகவர் (கொய்கா- KOICA) திட்டத்தின் நிதியுதவியுடன் Association of KOICA Fellows (AKOFE) யினால் சம்மாந்துறை கல்வி வலய பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கல்விநலனுக்காக  போட்டோகொப்பி இயந்திரம் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு சம்மாந்துறை சது/ அல்- முனீர் வித்தியாலய மண்டபத்தில் பாடசாலை அதிபர் ஏ.அப்துல் ஜப்பார் தலைமையில் இன்று (25) இடம்பெற்றது.

சம்மாந்துறை பிராந்திய பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர் வீ.எம். ரஸூல் ஆகியோர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த போட்டோகொப்பி இயந்திரம் அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாடசாலையில் உள்ள வகுப்பறை குறைபாடுகள், கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள உள்ள வளப்பற்றாக்குறை தொடர்பில் கொரிய சர்வதேச கூட்டுறவு முகவர் (கொய்கா- KOICA) திட்ட அதிகாரிகளுக்கு பாடசாலை அதிபர் களவிஜயத்தினூடாக விளக்கினார்.

இந்நிகழ்வில் கொரிய சர்வதேச கூட்டுறவு முகவர் (கொய்கா- KOICA) திட்டத்தின் பிரதிப்பணிப்பாளர் ஹிம் டொயின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் கொரிய சர்வதேச கூட்டுறவு முகவர் (கொய்கா- KOICA) திட்ட இணைப்பாளர், உத்தியோகத்தர்கள், Association of KOICA Fellows (AKOFE) தலைவர் ரொஷான் சேரசிங்க, சிரேஷ்ட உப தலைவர் கவிந்த்ர ஜெயவர்த்தன, செயலாளர் டி. விஜயசிங்க உட்பட நிர்வாக உறுப்பினர்கள், சம்மாந்துறை பிராந்திய பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள், பிரதியதிபர், பகுதி தலைவர்கள் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்