மொழி உரிமை பற்றிய மாவட்ட செயலமர்வு




 ( காரைதீவு   சகா)


மனித அபிவிருத்தி தாபனம் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்திட்டத்தின் ஆதரவுடன், அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திய மொழிஉரிமைகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத்திட்டம் சம்பந்தமான மாவட்ட செயலமர்வு, மற்றும்  திட்ட வளர்ச்சி பற்றிய பின்நோக்கு நிகழ்வு நேற்று காரைதீவு லேடிலங்கா மண்டபத்தில் நடைபெற்றது.

 தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பிபி .சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர்  வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.
 கௌரவ அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் இலங்கை மனிதர் உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏசிஏ.அசீஸ்  சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அரசசார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர் ஐ.எல்.எம்.இர்பான் அம்பாறை மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் பிரதீஸ்கரன் பிரான்சிஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

 இதன்போது ,திட்ட வளர்ச்சி பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டதோடு இத்திட்டத்திற்கு  உதவியோருக்கு பதக்கம் நினைவு பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் தாபனத்தின் வடகிழக்கு மாகாண பணிப்பாளர் பொன்னையா சிறிகாந்த் அம்பாறை உதவி இணைப்பாளர் எம்.ஜ. ரியால் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.