வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக மாணவர்களுக்கு விசேட விழிப்பூட்டல்



 


பாறுக் ஷிஹான்



வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக  மாணவர்களுக்கு    விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை  வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்தனர்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்று அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில்  குறித்த நிகழ்வு இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினர்களாக  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக  உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வீதி ஒழுங்கு தொடர்பில் மாணவர்களுக்கான கருத்தரங்குகள் நடாத்தபட்டு சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கப்பட்டது.மேலும் வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வினை பொலிஸார்  மேற்கொண்டிருந்தனர்.நாளைய இளைஞர்கள் இன்றைய மாணவர்கள் எனும் ரீதியில் மாணவர்களுக்கு வீதி ஒழுக்குகள் இவிதிமுறைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு பயற்சிகள்  கருத்தரங்குகளை பாடசாலை மட்டத்தில் மேற்கொண்டு வருகின்றோம். அதனால் பாடசாலை மாணவர்கள் வீதி ஒழுங்கு   விதிமுறைகளை அறிந்து கொள்வதன் ஊடாக வீதி விபத்துகளை தடுக்க முடியும் என கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன தெரிவித்தார்.

நிகழ்வின் நன்றி உரையினை கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட்  தெரிவித்ததுடன் கடந்த  செப்டம்பர் மாதம் 3 ஆந் திகதி முதல் ஆரம்பமான இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவானது எதிர்வரும்  10 ஆம் திகதி வரை இந்நிகழ்வு நாடு பூராகவும் மேற்கொள்ளப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந் நிகழ்வில் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய    பாடசாலை  அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு கல்முனை உவெஸ்லி   தேசிய  பாடசாலை எஸ்.கலையரசன்  ஆசிரியர்கள்  பொலீஸ்  பிரிவினர்  சிவில் பாதுகாப்புக் குழுவினர்  மாணவர்கள்   பொதுமக்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.