மாணவர்கள் கல்வியின் மூலம் சரியான இலக்கை அடைய வறுமை நிலை காரணமாக அமையக் கூடாது




 


எம்.என்.எம்.அப்ராஸ்,எம்.ஐ.சம்சுதீன்)



மாணவர்கள் கல்வியின் மூலம் சரியான இலக்கை அடைய வறுமை நிலை காரணமாக அமையக் கூடாது என்ற காரணத்தினால் சமுர்த்தி திணைக்களமானது  புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்துள்ளது என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தெரிவித்தார்


சமுர்த்திஅபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சமுர்த்தி சமூகப்பாதுகாப்பு நிதியத்தின் மூலம் உயர்தர மாணவர்களுக்கான (2021-2023) சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும்,சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு பெற்று பல்கலைக்கழகத்திற்க்கு தகுதி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பும்,கல்முனை பிரதேச  செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர்  ஏ.ஆர். எம்.சாலிஹ் தலைமையில் நேற்று பிற்பகல் (07)கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்  போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் மேலும் இங்கு உரையாற்றுகையில்

சமுர்த்தி திட்டத்தின் நோக்கம் வறுமையை ஒழிப்பதாகும் அவ்வாறு இருக்கும் போது நீங்கள்  சிந்திக்கலாம் வறுமையை ஒழிப்பதற்க்கு ஏன் புலமை பரிசில் வழங்க  வேண்டுமென்று புலமைபரிசில் வழங்குவதன்  மூலம் மாணவர்களின் கல்வியை விருத்தி செய்ய முடியும இதன் மூலம் குடும்பம் தலை நிமிர்ந்து வாழ முடியும்.

 ஆரம்பத்தில் நானும் கல்முனை பிரதேச செயலாளரும் சமுர்த்தி குடும்பத்திலிருந்து இந்த உயர் பதவிகளுக்கு வந்தவர்கள் தான்,அதே போன்று ஏழைக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் தான் பிற்காலத்தில் உலகில் தலை சிறந்த விஞ்ஞானியாகவும் இந்தியாவின் ஜனாதிபதியானார் ,கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறை வேற்று பணிப்பாளர் சுந்தர் பிச்சை சாதரண குடும்ப தொழிலாளியின் மகனாவார் இப்படி இவர்கள் கல்வின் முலம் தலை நிமிர்ந்து வாழ முடியுமானால்  உங்களுக்குக்கும் அது ஏன் முடியாத விடயமா ?

கல்வியை என் நிலையிலும் மாணவர்கள் விட்டு விடக் கூடாது கல்வி என்பது எமது மூலதனம் இங்கு  உள்ள மாணவர்கள் அனைவரும்  நாளை சமூகத்தில் உயர் நிலையை அடைய வேண்டும் நாம் இருக்கும் கதிரையில் எதிர்காலத்தில் மாணவராகிய நீங்கள் முன்னனால் அமர்ந்து அலங்கரிக்க வேண்டும்.