(வி.ரி. சகாதேவராஜா)
யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற பாண்டிருப்பு கூட்டத்தில் 100 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கல்முனை பாண்டிருப்பு பல்தேவைகட்டிடத்தில் இக் கூட்டம் மகளிர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவி திருமதி நித்தியகைலேஸ்வரி சுந்தரராஜன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அங்கு பாண்டிருப்பு 1,1A,1B,1C,2,2A,2B,2C ஆகிய பிரிவுகளில் 100 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கூட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்,வாலிபர் முன்னணி உபதலைவர் அ.நிதான்சன் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
வடகிழக்கு மறுவாழ்வு அமைப்பின் சார்பில் வாழ்வாதார உதவிட்டங்களும் மாணவர்களுக்கான கற்றல் உபரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment