"கிரான் மத்தியகல்லூரியின் மாணவர் சட்ட மன்ற அங்குரார்ப்பணமும் சட்ட அறிமுக பயிற்சி நிகழ்வும்"




 "கிரான் மத்தியகல்லூரியின் மாணவர் சட்ட மன்ற அங்குரார்ப்பணமும் சட்ட அறிமுக பயிற்சி நிகழ்வும்" (Kiran Central College Students Law Society's Inauguration & Orientation Event)


 இலங்கையின் வரலாற்றில் முதல் முதலாக பாடசாலை மட்டத்தில் மாணவர் சட்ட மன்றம் உத்தியோகபூர்வமாக இன்று 26.07.2023 கிரான் மத்தியகல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது 

   

மேற்படி நிகழ்வானது அதிபர் திரு. மா. தவராஜா அவர்களின் தலைமையில் பழைய மாணவர் அமைப்பின் தலைவர் திரு. சீ. சுகிதரன் அவர்களின் வரவேற்புடன் இனிதே இடம்பெற்றது.


இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேல்நீதி மன்ற கெளரவ நீதிபதி என். எம்.எம்.அப்துல்லா அவர்களினால்  மாணவர் சட்ட மன்றம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட து. 


மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீடத்தின் விரிவுரையாளர் திருமதி சுபாசினி ருமணன் அவர்களால்  சட்டம் தொடர்பிலான அறிமுக பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பபட்டது.


இந் நிகழ்வில் எமது வலையக் கல்விப்பணிப்பாளர் திரு. த.அனந்தரூபன்,  பிரதி கல்விப்பணிப்பாளர் திரு.கே. ஜெயவதனன்,

கோ. ப. தெற்கு பிரதேச செயலாளர் திரு. ராஜ்பாபு மற்று கிரான் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.


இவ் வரலாற்று நிகழ்வில்  கலந்து சிறப்பித்த அனைத்து அதிதிகள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது பழைய மாணவர் அமைப்பின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.


மேலும் மத்திய கல்லூரிக்கான பழைய மாணவர் அமைப்பின் இணைப்பாளர் திரு.ச.கதிரவன், மாணவர் சட்ட மன்றத்தின் இணைப்பாளர் திரு.கு. புருசோத்தமன், இணைப்பாசிரியர் திரு. குகராசா,  பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் திரு. பூ. வராதராஜன் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுடனான நன்றிகள்.


மாணவர் சட்ட மன்றத்தின் செயற்திட்டத்தினை பொறுப்பேற்று நடைமுறைப்படுத்தும் 1999/2000 வகுப்பு பழையமாணவர்களுக்கு மேற்படி நிகழ்வுக்கு அனுசரனை வழங்கி சிறப்புடன் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக அமைப்பின் சார்ப்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.  


   

   "நன்றி"

-செயலாளர்-