பொத்துவிலில், பெளத்த மதகுருவினை அண்மையில் தாக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட 9 சந்தேக நபர்களுக்கு எதிராக, பொத்துவில் நீதிமன்றில் இன்றைய தினம் ஆள் அடையாள அணிவகுப்பு நடத்தப் பெற்றது.
தாக்குதலுக்கு இலக்கான சங்கைக்குரிய பெளத்த மதகுரு , அடையாள அணிவகுப்பில் உரிய சந்தேக நபர்கள் எவர்களையும் அடையாளம் காட்டாடததால், இவர் களை பிணையில் விடுவிக்குமாறு, சந்தேக நபர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளான ஹில்மி, முனாசுடீன், வதூத், சாதிர் ஆகியோர் வாதிட்டனர்.
பொத்துவில் நீதிமன்ற கெளரவ நீதிபதி A C றிஸ்வான் குறித்த சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்துள்ளார்.


Post a Comment
Post a Comment