மாவடிப்பள்ளி அல்- மதீனாவில்





 மாளிகைக்காடு செய்தியாளர்


மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலையின் 27 ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலையின் பணிப்பாளரும், மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தலைவருமான எம்.எச்.எம். அஸ்வர் அவர்களின் தலைமையில் மாவடிப்பள்ளி அல்- அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று (09) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மயோன் குரூப் நிறுவனத்தின் பணிப்பாளரும், ரிஸ்லி முஸ்தபா கல்வி மையத்தின் தலைவருமான ரிஸ்லி  முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்களின் வகிபாகம், எதிர்காலத்தில் பிள்ளைகளை சிறந்த தலைவர்களாக உருவாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய பணிகள், எதிர்காலம் மீது உள்ள சவால்கள் தொடர்பில் கருத்துரைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினரும், மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் கலந்து கொண்டார். மாவடிப்பள்ளி ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் ஏ.எல்.எம். மனாப், அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி பீ .எம். றியாத், டலண்ட் பிளஸ் நிறுவனர் அல்ஹாபிழ் ஆர்.எம். சில்ஹான் உட்பட அதிதிகள், பெற்றோர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கடந்த காலங்களில் இப்பாலர் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள், சாதாரண  தரத்தில் அதி திறமை சித்தி பெற்ற மாணவர்கள், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி அதிதிகளினால் மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவு சின்னங்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.