பாகிஸ்தான் பெண்ணுக்கு டெல்லி நபரின் இதயத்தை பொருத்திய சென்னை மருத்துவர்கள் - எப்படி சாத்தியமானது?




 


கராச்சியில் இதை விட நெருக்கமாக வீடுகள் இருக்கும். ஆனால் இவ்வளவு வண்ணங்கள் இருக்காது.”

மருத்துவமனையின் பதினொறாவது மாடியில் நின்றபடி, ஜன்னல் வழியாக சென்னை நகரத்தைப் பார்த்துக் கொண்டே பதிலளித்தார் சனோபர் ரஷீத். 19 வயதான தனது மகள் ஆயிஷாவுக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 10 மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து நம்பிக்கையோடு இந்தியாவிற்கு வந்த அவரின் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை நிறைந்திருந்தது.

ஆயிஷாவுக்கு ஏழு வயது இருக்கும் போது அவருக்கு 25% இதய பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. படிப்படியாக இதயம் செயலிழக்க ஆரம்பித்தது. 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள மூத்த இதயவியல் மருத்துவரை காண வந்திருந்தனர். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அவருக்கு செயற்கை இதயத் துடிப்பு கருவி பொருத்தப்பட்டது. அதன் பின் கராச்சி திரும்பிய ஆயிஷாவுக்கு இரண்டு ஆண்டுகளில் தொற்று ஏற்பட்டு, அவரது இதயத்தின் வலதுபுறம் செயலிழக்க ஆரம்பித்தது. இதற்கு பிறகு, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.