திருக்கோவில் வலயத்திலிருந்து 10 மாணவர்கள் தெரிவு



 


கட்டுரை மற்றும்  சித்திரப்போட்டியில் அம்பாறை திருக்கோவில் வலயத்திலிருந்து 10 மாணவர்கள் தெரிவு.


ஜே.கே.யதுர்ஷன்


அவுஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் கல்வியமைச்சு ஆகியன இணைந்து 

"ஏமாறாது இருப்போம் நேர்வழி செல்வோம்" எனும் சமூக நலனோம்புகை விழிப்புணர்வு செயற்திட்டத்திற்கு  அமைவாக சித்திரம் மற்றும் கட்டுரைப் போட்டி நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில்  கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா நாட்டுக்குள்  பயணிக்கும் அபாயத்துக்கு முகம் கொடுத்துள்ளவர்கள், அதிகளவில் வசிக்கும் பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் இடம்பெற்றது. 


இப்போட்டியில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட பொத்துவில் கோட்ட பாடசாலையான பொத்துவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் 10பேர் இப்போட்டியில் தெரிவாகி வெற்றி பெற்றுள்ளனர்.


திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு ஆர்.உதயகுமார் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலை ஆசிரியர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் 

இரண்டு வயதுப் பிரிவுகளில்  (9- 11  மற்றும் 12- 13 தரங்களின் அடிப்படையில் 18 மாவட்டங்களில் இருந்து  717 சித்திரங்கள் மற்றும் 803 கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன.  கல்லி அமைச்சின் அழகியற்கலை மற்றும் தேசிய மொழிகள் மற்றும் மானிடவியல் பிரிவினால் முன்மொழிவு செய்யப்பட்டு  புத்தி ஜீவிகளைக் கொண்ட நடுவர் குழாத்தினால் 170 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப 

ஜாஸ்மின் அரங்கில் அண்மையில்(01) இடம்பெற்றிருந்தது. அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை துணை உயர் ஸ்தானிகர் வலிதா கபூர் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன்  இலங்கை அமைச்சின் செயலாளர்கள் கல்வி சார் அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர் பெற்றோர் சமயத்தலைவர்கள் புத்திஜீவிகள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.