கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதியும் இன்று (27) விசாரணையிலிருந்து விலகினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன, இன்று காலை வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
பின்னர் வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது தானும் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவும் அறிவித்துள்ளார்.
அதன்படி, வழக்குக்கு பொருத்தமான நீதிபதியை நியமிப்பதற்காக, மே 21 ஆம் திகதி கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.


Post a Comment
Post a Comment