#அம்பாறை மாவட்டத்தில் 385 தேர்தல் முறைப்பாடுகள்




2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற  தேர்தலில் 22919 தபால் மூல வாக்களிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.1300 உத்தியோகத்தர்கள் கடமையாற்றவுள்ளனர்.2000 பொலிஸாரும் இத்தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளனர்.ஏனைய தரப்பினர் 5000 பேர் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் இத்தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.இதேவேளை  வாக்காளர்கள் அனைவரும் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறும்  இறுதிநேரம் வரை காத்திருக்காது வாக்குரிமையை பயன்படுத்துமாறும் இதன்போது அவர் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிசார் , தேர்தல் கண்காணிப்பாளர்கள்  ,ஊடகவியலாளர்கள், உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.வாக்களிப்பு நிலையத்தில்   காலை 07 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 04 மணி வரை  வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க இடமளிக்க முடியாது என்றார்.