விசுவாவசு சித்திரைப்புத்தாண்டை வரவேற்பதற்காக,மக்கள் தயார்



 


வி.சுகிர்தகுமார்     

 விசுவாவசு சித்திரைப்புத்தாண்டை வரவேற்பதற்காக அம்பாரை மாவட்ட தமிழ் சிங்கள மக்கள் தயாராகி வருகின்றனர்.
இன்று இரவு பிறக்கின்ற இப்புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஆடை மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான முன்னேற்பாடுகளில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னொருபோதும் இல்லாதவாறு மக்கள் கூட்டம் பொருட் கொள்வனவில் இரவு பகலாக ஈடுபடுவதற்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களும் அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பும் காரணமாக அமைந்துள்ளதை இங்கு உணர முடிந்தது.
அங்காடி விற்பனை கூடங்களிலேயே அதிகளவான மக்கள் கூடியிருப்பதை அவதானிக்க முடிந்தது.
அத்தோடு பெருமளவிலான பொருட்கள் சந்தையில் தட்டுப்பாடின்றி கிடைத்து வருவதும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.