சாய்ந்தமருது - 07, மார்க்கட் வீதியில் வசித்து வந்த முஹம்மது செயின் முஹம்மது றியாஸ் ( ஜெமில் ஞாபகார்த்த வைத்தியசாலை மருந்தாளர்) அவர்கள் சற்று முன் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்.
அன்னார் முஹம்மது செயின் தம்பி ( ஓய்வு பெற்ற காசாளர் இலங்கை வங்கி)மர்ஹுமா ஆதம்பாவா பாத்தும்மா ( சைலா)) ஆகியோரின் அன்பு மகனும் உம்முல் சஜ்றா அவர்களின் அன்புக் கணவரும் நுஹா ஸெரீன் , பாத்திமா நிதா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஜாஹாங்கீர் ( நிள அளவையாளர்),றமீஸ்,பயாஸ் ( மின் அத்தியட்சகர் இலங்கை மின்சார சபை), ஹக்கீம் ( இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்),நிப்றாஸ் (அலுவலக உதவியாளர் கமு/காரியப்பர் வித்தியாலயம் சாய்ந்தமருது) ஆகியோரின் அன்புச் சகோதரரும் மற்றும் மர்ஹும்களான ஆதம்பாவா ( ஆசிரியர்) சுபைதா ( றகுமத்தும்மா) ஆகியோரின் அன்பு மருமகனும்) அரூஸ் ( சட்டத்தரணி),சாஹிர் (வைத்தியர் கொழும்பு தேசிய வைத்தியசாலை), ஜவாத் (ஆய்வுகூட உதவியாளர் ஸாஹிறாக் கல்லூரி, கல்முனை),நிஷாத் ( ஆய்வுகூட உதவியாளர் மத்திய கல்லுரி சம்மாந்துறை) ஆகியோரின் மச்சானும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸாத் தொழுகை இன்ஷா அல்லாஹ் நாளை 30/04/2025 புதன் கிழமை காலை 7.00 மணியளவில் சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசலில் நடாத்தப்பட்டு சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக ஆமீன்.
Post a Comment
Post a Comment