அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வானது ஒரு கண்துடைப்பானது என தமிழ் முஸ்லிம் சிங்கள இனவாத அரசியல்வாதிகள் வேண்டுமென்றே கேலி செய்தனர்



 


வி.சுகிர்தகுமார்       


 வரவு செலவுத்திட்டத்தினூடாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வானது ஒரு கண்துடைப்பானது என தமிழ் முஸ்லிம் சிங்கள இனவாத அரசியல்வாதிகள் வேண்டுமென்றே கேலி செய்தனர் என அம்பாரை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்பேசும் பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக்குழு தலைவருமான ஏ.ஆதம்பாவா கூறினார்.
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 8 ஆம் பிரிவில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் வேட்பாளருமான ஆர்.ரதீசன் தலைமையில் வேட்பாளர் ப.ஜனுசியா ஒருங்கிணைப்பில்  (22) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இச்சந்திப்பில் கட்சியின் வேட்பாளர்களான தங்கேஸ்வரன் யோகநாயகம் உள்ளிட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த அவர் அனுர அரசு பொய் சொல்கின்றது. சம்பள அதிகரிப்பு இடம்பெறவில்லை. மாறாக குறைவடைந்துள்ளது என்றனர். ஆனால் அரச உத்தியோகத்தரிகளின் அடிப்படை சம்பளத்தில் பெருந்தொகை அதிகரித்துள்ளது
அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டதன் பின்னரே பலர் உணர்ந்து கொண்டனர். ஒவ்வொரு உத்தியோகத்தர்களின் தரத்திற்கு ஏற்ப 9000 ஆயிரம் முதல் 50000 ஆயிரம் வரை சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொண்டனர். இதன் பின்னராக அனைத்து உத்தியோகத்தர்களும் அனுர அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் அவை அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என்றார்.