ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பினை ஏற்று நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நரேந்திர மோடி சற்று நேரத்தின் முன் அநுராதபுரத்திலிருந்து இராமேஸ்வர் நோக்கி புறப்பட்டார்.
இந்நிலையில், தனது இலங்கை விஜயம் குறித்து எக்ஸ் தள பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
எனது வருகையின் போது அளித்த அன்பிற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொழும்பாக இருந்தாலும் சரி, அநுராதபுரமாக இருந்தாலும் சரி, இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகத்தை அளிக்கும் என இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment