( காரைதீவு சகா)
விசுவாவசு சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 42வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாகவும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமுக நிலையமும் இணைந்து ASCO மற்றும் சொர்ணம் நகைமாளிகையினதும் இணை அனுசரணையுடன் கடந்த சனிக்கிழமை நடாத்திய
'27வது மாபெரும் கலாசார விளையாட்டு விழாவின் காலைநிகழ்வாக மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பித்தத இம் மரதன் ஓட்டம் ஊர் வீதிகளூடாக வலம் வந்து விளையாட்டு கழகத் தலைமையகத்தை வந்தடைந்தது.
கழகத் தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கழக போசகர்களான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் மற்றும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.


Post a Comment
Post a Comment