பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. இதில், எல்லை கட்டுப்பாட்டுக் கோடுக்கு அருகில் இருக்கும் சலமாபாத் கிராமம் பாதிக்கப்பட்டது. இங்குள்ள வீடுகள் தீக்கிரையாகின. குண்டுவீச்சு தாக்குதலால் அச்சமடைந்த மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறியதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, புதன்கிழமை இரவு முதல் 25 இந்திய டிரோன்களை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.
முன்னதாக, 12 இந்திய டிரோன்களை அழித்ததாக பாகிஸ்தானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் கூற்றுகளுக்கு இந்தியா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
அதே சமயம், 'புதன்கிழமை இரவு, டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பல இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்க முயன்றதாக' இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment