இஸ்லாமியர்களின் புனித யாத்திரை 'ஹஜ்' எனப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்குப் பெருந்திரளாகச் சென்று ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள்.
ஹஜ் யாத்திரை இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக உள்ளது.
உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இயன்ற ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்களின் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது இந்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் வருடந்தோறும் பக்தர்களை ஈர்ப்பதில் ஹஜ் யாத்திரை முக்கியப் பங்கு வகிக்கிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
யுபிஐ பரிவர்த்தனைகள், ஆதார் அட்டை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், இந்தியா
யுபிஐ பரிவர்த்தனை முதல் ஆதார் அட்டை வரை: ஜூன் 1 முதல் அமலாகும் புதிய விதிகள்
MI vs GT, ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், பும்ரா
மும்பை தோல்விகளில் இருந்து மீண்டு எழுச்சி பெற காரணமான 6 முக்கிய விஷயங்கள்
முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் வெங்காயம் உட்கொள்வது நல்லதா? ஆரோக்கியம், உணவு,
முளைவிட்ட உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்க்கலாமா?
பல் மருத்துவ சிகிச்சைப் பெற்ற எட்டு பேர் மூளை பாதிக்கப்பட்டு உயிரிழப்பு
திருப்பத்தூர்: ஒரே கிளினிக்கில் பல் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளைத்தொற்றுக்கு பலியானது எப்படி? லான்செட் ஆய்வில் தெரியவந்த உண்மை
End of அதிகம் படிக்கப்பட்டது
மெக்கா என்பது முஹம்மது நபியின் பிறப்பிடமாகவும், புனித நூலான குர்ஆனின் முதல் வெளிப்பாடுகளைப் பெற்ற இடமாகவும் கருதப்படுகிறது.
இஸ்லாத்தின் புனிதமான இடமாகக் கருதப்படும் மஸ்ஜித் அல்-ஹராம், புனித மசூதி அல்லது மெக்காவின் கிராண்ட் மசூதி என அழைக்கப்படுகின்றது.
அதன் மையத்தில் கறுப்புத் துணியால் மூடப்பட்ட காபா அமைந்துள்ளது.
ஹஜ் குறித்து நீங்கள் இதுவரை அறிந்திராத 5 ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
ஹஜ் யாத்திரை, மெக்கா, இஸ்லாம், முகமது நபிபட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு,2024 ஆம் ஆண்டில், 1.8 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றனர். இது சவூதி அரேபியாவின் பொருளாதார மற்றும் சமூகத் தரவுகளை வழங்கும் "டேட்டா சவூதி" என்ற புள்ளிவிவரத் தளத்தின் தகவல்களின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகிறது.
காபா - இப்ராஹிம் நபியின் மரபு
வருடந்தோறும் இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரை, இஸ்லாத்தின் முக்கியமான மதக் கடமைகளில் ஒன்றாக உள்ளது.
அந்த அடிப்படையில், இஸ்லாத்தை நிறுவிய முஹம்மது நபியுடன் மட்டுமே இந்த யாத்திரை தொடர்புடையது என்று சிலர் புரிந்துகொள்வதும் இயல்பானது தான்.
நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள இந்த மதச் சடங்கு, நபி இப்ராஹிம் உடன் தொடங்கியது. இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, இப்ராஹிம் நபி 'காபாவைக்' கட்டிய நபராகக் கருதப்படுகிறார்.
அல்லாவுக்குக் கீழ்ப்படிந்து, நபி இப்ராஹிம் தனது மகனைப் பலியிட இருந்த நிகழ்வை, ஹஜ்ஜில் நடைபெறும் சடங்குகள் நினைவுகூருகின்றன.
ஆனால் பலி கொடுக்கப்படுவதற்கு முன்பாக, அல்லா அதைத் தடுத்து, இப்ராஹிமின் மகனைப் பாதுகாத்தார்.
நபி இப்ராஹிம் கிறித்தவம் மற்றும் யூத மதத்தில் ஆபிரகாம் என்று அழைக்கப்படும் ஒரு முக்கிய நபராகவும் உள்ளார்.
ஹஜ் யாத்திரை: இந்திய பயணிகளுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்த சௌதி அரசு - ஏன்? என்ன பிரச்னை?
18 ஏப்ரல் 2025
தமிழ்நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து அதிகரித்து வரும் ஹஜ், உம்ரா பயண மோசடிகள்
15 மார்ச் 2025
மெக்கா: முஸ்லிம் புனித தலத்தை ஆயுதக் குழு கைப்பற்றியது எப்படி? சௌதி அரேபியா எவ்வாறு மீட்டது?
24 நவம்பர் 2024
ஹஜ் யாத்திரை, மெக்கா, இஸ்லாம், முகமது நபிபட மூலாதாரம்,Yassine Gaidi/Anadolu Agency
படக்குறிப்பு,ஹஜ்ஜின் போது, ஆண்களும் பெண்களும் ஒரே நேரத்திலும் ஒரே இடத்திலும், பெரும்பாலும் அருகருகே அமர்ந்து ஒரே சடங்குகளைச் செய்கிறார்கள்
பாலினப் பாகுபாடு கிடையாது
பெரும்பாலான மசூதிகளைப் போல, பாலின அடிப்படையில் வேறு வாயில்கள் அல்லது தொழுகை செய்வதற்கு தனித்தனி பகுதிகளைப் பின்பற்றும் மற்ற இஸ்லாமிய சடங்குகளைப் போலல்லாமல், ஹஜ் யாத்திரையின் போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எந்த பாலின பாகுபாடும் கடைபிடிக்கப்படுவது இல்லை.
தனித்துவமான ஆடை அணிவதற்கான வழிமுறைகள்
ஹஜ் யாத்திரை செல்லும் பக்தர்கள் ஆன்மிக சமத்துவத்தையும், பணிவையும் பிரதிபலிக்கும் வகையில் ஆடை அணிவதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்கள்.
ஹஜ் யாத்திரை, மெக்கா, இஸ்லாம், முகமது நபிபட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு,பெண் யாத்ரீகர்கள் ஆண்களைப் போன்ற வெள்ளை ஆடைகளை அணிவதில்லை
ஆண் யாத்ரீகர்கள் 'இஹ்ராம்' எனப்படும் எளிய, வெள்ளை நிற ஆடையை அணிகிறார்கள். சமூக அல்லது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், அனைவரும் சமம் என்பதை இது குறிக்கிறது.
பெண் யாத்ரீகர்கள் ஆண்கள் அணியும் வெள்ளை துணிகளை அணிவதில்லை.
ஆனால் அவர்கள் தங்களது உடலை முழுவதும் மறைக்கும், தளர்வான ஆடைகளை அணியலாம். அவர்கள் தங்கள் தலையில் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும். அவர்களின் முகங்கள் ஹஜ்ஜின் போது மறைக்கப்படாமல் இருக்க வேண்டும்.
ஹஜ் யாத்திரையில் தொடரும் உயிரிழப்புகள் - சௌதி அரேபியாவில் இறந்தால் உடலை என்ன செய்வார்கள்?
23 ஜூன் 2024
ஹஜ் யாத்திரையின் போது முஸ்லிம்கள் கடைபிடிக்கும் 8 சடங்குகளும் உணர்த்தும் உண்மைகள்
18 ஜூன் 2024
ஹஜ் யாத்திரை, மெக்கா, இஸ்லாம், முகமது நபி
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மலை ஏறுதல்
ஹஜ்ஜின் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்று 'தவாஃப்'. இதில் யாத்திரையின் தொடக்கத்திலும் முடிவிலும், பக்தர்கள் காபாவை எதிரெதிர் திசையில் ஏழு முறை வட்டமிடுகிறார்கள். ஆனால், இரண்டு மலைகளுக்கிடையே நடந்து செல்லும் மற்றொரு சடங்கு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஹஜ்ஜின் ஒரு பகுதியாக, மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே அமைந்துள்ள சஃபா மற்றும் மர்வா எனும் இரண்டு மலைகளுக்கு இடையில் ஏழு முறை நடந்து செல்வதும் அடங்கும்.
இப்ராஹிம் நபியின் மனைவி ஹஜாரின் போராட்டம் மற்றும் சகிப்புத்தன்மையை நினைவுகூரும் செயலாக இது கருதப்படுகிறது.
அவர் தனது கைக்குழந்தைக்காகத் தண்ணீர் தேடி, இரண்டு மலைகளுக்கு இடையில் ஓடிய நிகழ்வை இது குறிக்கிறது.
மெக்கா: இஸ்லாமை எதிர்த்த நகரம் அதே இஸ்லாமின் மையமாக உருவெடுத்தது எப்படி?
1 ஏப்ரல் 2024
ஹஜ் யாத்திரை என்ற பெயரில் நடக்கும் மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி?
15 மே 2023
நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
29 மார்ச் 2023
ஹஜ் யாத்திரை, மெக்கா, இஸ்லாம், முகமது நபிபட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு,யாத்ரீகர்கள் பிரார்த்தனைக்காக அரபாத் மலையின் சமவெளியில் கூடுகிறார்கள்
அராபத் மலையில் நடைபெறும் வழிபாட்டின் உச்சக்கட்டம்
ஹஜ் யாத்திரையின் மையப் புள்ளியாக காபா இருப்பினும், அந்த வழிபாட்டின் உச்சகட்டம் மெக்கா நகரத்துக்கு வெளியே உள்ள பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள அராஃபத் மலையில் நிகழ்கிறது.
இங்கு, சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை ஒரு நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ஒன்று கூடி, பிரார்த்தனை செய்து, தியானத்தில் ஈடுபட்டு, குர்ஆன் ஓதி வழிபடுகிறார்கள்.
இஸ்லாமிய நம்பிக்கையின்படி, முஹம்மது நபி தனது கடைசி பிரசங்கத்தை நிகழ்த்திய இடமாக கருதப்படும் இந்த புனித தலம், இஸ்லாத்தில் ஆழமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.


Post a Comment
Post a Comment