நியமனம்






 நூருல் ஹுதா உமர்


காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு ஊருக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளராக முஹம்மட் ரஹுபி பிர்தௌஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2025.03 24 ம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் வைத்து காணி மற்றும் மாவட்ட பதிவாளர் துமிந்த புஸ்பகுமார அவர்களிடமிருந்து கிடைத்த நியமனத்தை அடுத்து (2025-05-09) அன்று முதல் செயல்படும் வண்ணம் காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து தனது நியமனத்தை அவர் உறுதிப்படுத்திக்கொண்டார்.

மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்னாள் செயலாளராகவும், ஜனாஸா நலன்புரி அமைப்பின் முன்னாள் செயலாளராகவும் மற்றும் பல பொதுநிறுனங்களிலும் இணைந்து பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் இவருக்கு இந்நியமனம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.