கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக அறை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் நீதவானுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (19) நீதிமன்றத்திற்கு வந்து, தனது அலுவலக அறையில் உள்ள தனிப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவரை, குறித்த அலுவலக அறைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் கூறினர்.
தற்போது, கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
\
(Tamilan News)
.jpg)

Post a Comment
Post a Comment