கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு - வளிமண்டல திணைக்களம்
மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கையானது இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.
மின்னல் தாக்கம் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment