சந்திப்பு!



 


நூருல் ஹுதா உமர்


கொழும்பில் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளர்  கிறிஸ்டின் பி பார்கோவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான செந்தில் தொண்டமான் சந்தித்தார்.

சமீபத்தில் தோட்ட இளைஞர்கள் இடம்பெயர்வின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன்,அவர்கள் இடம்பெயரும் போது தேவையான உதவிகளை முன்னெடுக்க  நடவடிக்கை  மேற்கொள்ளுமாறு  கிறிஸ்டின் பி பார்கோவிடம் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.