இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்?
கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பும்ரா, இதற்கு முன் இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். பும்ரா தலைமையில் 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 1 போட்டியில் வெற்றியடைந்துள்ளது.
2024-25ஆம் ஆண்டில் இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் ரோஹித் ஷர்மா தனிப்பட்ட காரணத்தால் முதல் டெஸ்ட் போட்டிக்கானஅணியில் இடம்பெறவில்லை. இந்த சமயத்தில் இந்திய அணியை அவர் வழிநடத்தினார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும், இந்த தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா அணியிலிருந்து விலக அந்த போட்டியிலும் பும்ரா இந்திய அணியை வழிநடத்தினார். ரோஹித், விராட் வரிசையில் அனுபவமிக்க வீரர்களில் ஒருவராக பும்ரா கருதப்படுகிறார்.
கே.எல். ராகுலும் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தியுள்ளார். விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். இவரின் தலைமையில் 3 போட்டிகள் விளையாடியுள்ள இந்திய அணி 2 போட்டிகளில் வென்றுள்ளது.
2022ஆம் ஆண்டு வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியை வழிநடத்தி இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினார் கே.எல். ராகுல். 58 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் 3257 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர். 43 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 2948 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 42 ரன்கள் சராசரி வைத்திருக்கிறார்.
32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கில் 1893 ரன்கள் எடுத்துள்ளார். அவருடைய உடல் தகுதி சிறப்பாக உள்ளதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். சிலர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கில் வரலாம் என ஊகிக்கின்றனர். ஆனால் அயல்நாடுகளில் அவரது பேட்டிங் சிறப்பாக இல்லை. இதுவரை ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார்.


Post a Comment
Post a Comment