பதுளைக்கான புதிய குறுகிய பாதை அபிவிருத்தி !



 


கண்டியிலிருந்து பதுளைக்கான ஆகக் குறுகிய பாதையொன்று தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இது மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து, கோரி வந்த ஒரு விடயமாகும், இது தற்போது நிஜமாகியுள்ளது.

இந்த வீதியின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், இது கண்டி மற்றும் பதுளைக்கு (ஹங்குராங்கெத்த, வலப்பனை, மஸ்பன்னை ஊடாக) பயணிக்கக் கூடிய ஆகக் குறுகிய பாதையாக அமையும்.
எதிர்காலத்தில், பதுளை மற்றும் வெலிமடை டிப்போக்களின் தூரப் பிரதேச சேவைகள் வலப்பனை, ஹங்குராங்கெத்த ஊடாக கண்டிக்கு பயணிக்கத் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.