(வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு வெல்லாவெளியில் இலவச கண் சிகிச்சை முகாமொன்றை பெரன்டினா நிறுவனம் முன்னெடுத்திருந்தது.
பெரண்டினாவின் களுவாஞ்சிக்குடி கிளையின் 10 வது ஆண்டு நிறைவினையும் உலக உயர் இரத்த அழுத்த தினத்தினையும் முன்னிட்டு இம் முகாம் நடாத்தப்பட்டது.
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்றினை வெல்லாவெளி போரதீவுபற்று கலாசார மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் நடாத்தியிருந்தனர்.
இதற்கு வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பெரண்டினா ஊழியர்கள் மற்றும் பெரண்டினா வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்


Post a Comment
Post a Comment